fbpx

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத அன்புமணி..!! கடலூரில் தங்கர் பச்சான்..!! முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா, மாநிலப் பொருளாளர், பா.ம.க.

அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு,

சேலம் – அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், மாவட்டச் செயலாளர், பா.ம.க.,

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

கடலூர் – தங்கர் பச்சான். எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க

தருமபுரி – அரசாங்கம், பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்டம்

விழுப்புரம் – முரளி சங்கர், மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

இந்தத் தேர்தலில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் பாமக சார்பில் தேர்தல் அரசியலில் களம் இறங்குகிறார். அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை இயக்கியிருக்கும் இவர், நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 2019 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி தோல்வியடைந்தார். தொடர்ந்து மாநிலங்களவை எம்பியாக உள்ள அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், மீண்டும் அவர் மாநிலங்களை எம்பியாகவே தொடருவார் என தெரிகிறது.

Chella

Next Post

திமுகவுக்கு அடுத்த சிக்கல்...! 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Fri Mar 22 , 2024
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2017 இல், டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், 2ஜி ஊழல் தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குகளில் இருந்து ஆ.ராசா, எம்.பி கனிமொழி மற்றும் மற்ற 17 பேரை விடுவித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, பி. […]

You May Like