fbpx

பாமக வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா அறிவிப்பு..!! எங்கு போட்டியிடுகிறார்..?

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். பிரச்சாரமும் களைகட்டி வருகிறது.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா

அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,

ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்

கடலூர் - தங்கர் பச்சான்,

மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,

தருமபுரி - அரசாங்கம்

சேலம் - ந. அண்ணாதுரை

விழுப்புரம் - முரளி சங்கர்

காஞ்சிபுரம் - வெ.ஜோதி வெங்கடேசன்

இந்நிலையில், பாமக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்பவருக்கு பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடவுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : விடுதலையாகிறாரா செந்தில் பாலாஜி..? வரும் 28ஆம் தேதி முடிவு..!! நீதிபதி அதிரடி..!!

Chella

Next Post

Annamalai | ”டாய்லெட் பேப்பராக திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்”..!! வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!!

Sat Mar 23 , 2024
திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த தேர்தல் வந்ததும் அதே அறிக்கையில் சில மாற்றங்களை செய்வது வாடிக்கைதான். அதாவது முன்பு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கிறோம் என போட்டிருந்தால், […]

You May Like