fbpx

மேலும் ஒரு ராணுவ வீரர் வீரமரணம்!. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

Terrorists attack: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், நேற்று (ஜூலை 08) ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடன் உஷாரான பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இந்த தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளதாகவும் இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 6-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

Readmore: எச்.ஐ.வி சிகிச்சையில் ஆண்டுக்கு 2முறை ஊசி போடுவது 100% பயனுள்ளதாக இருக்கும்!. ஆய்வில் தகவல்!.

English Summary

And a soldier martyred!. Death toll rises to 5!

Kokila

Next Post

குட் நியூஸ்...! வாகனங்கள் பழுதுபார்க்கும் நடைமுறை...! வந்தது புதிய இணையத்தளம்...!

Tue Jul 9 , 2024
Vehicle repair procedure...! A new website has arrived

You May Like