fbpx

திருப்பதியில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா..!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஒன்று திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோவில். திருமலையில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஷ பெருமாளுக்கு அண்ணன் என போற்றப்படுபவர் கோவிந்தராஜ சுவாமி. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கோவிந்த ராஜ பெருமாளையும், திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசத்த பிறகே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பார்கள்.

பத்மாவதி தாயார் மற்றும் கோவிந்த ராஜ பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை கூறி விட்டு, ஏழுமலையானை சென்று தரிசித்து விட்டு வந்தால் நம்முடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். திருப்பதி சென்று வந்த முழு பலனும் கிடைத்து, வாழ்வில் திருப்பம் என்பது ஐதீகம். மிகப் பழமையான இக்கோவிலில் ஆண்டாள், அனுமார், லட்சுமி நாராயணம், ராமானுஜர் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு ஜூலை 13 ம் தேதி துவங்கி, ஜூலை 22 ம் தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர விழா நடைபெற உள்ளது. இந்த நாட்களில் காலையில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் அஸ்தனமும் நடைபெற உள்ளது.

ஆண்டாள் திருவாடிப்பூர விழாவின் நிறைவு நாளான ஜூலை 22 ம் தேதி ஆண்டாள் தாயாருக்கு சாத்முறை நடைபெறும். அன்று காலை 09.30 முதல் 10.30 வரை கோவிந்த ராஜ சுவாமி மற்றும் ஆண்டாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அன்று மாலை 4 முதல் 8 மணி வரை கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

இந்த ஆண்டு வெகு விமர்சையாக ஆடிப்பூர விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆடிப்பூர விழாவிற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கவனித்து வருகிறது. பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையில் ஜூலை 22 அன்று இந்த ஆண்டு ஆடிப்பூர திருநாள் வருகிறது. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maha

Next Post

அரைகுறை ஆடையுடன் போன ஷகீலா..!! துரத்திவிட்ட சில்க் ஸ்மிதா..!! இப்படியெல்லாமா செய்தார்..?

Wed Jul 12 , 2023
தமிழ் சினிமாவில் 80-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சு, அழகிய கண்கள், வித்தியாசமான ஆடைகள் அணிவது என அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் தெரியாமல் எத்தனையோ பேருக்கு உதவியும் செய்திருக்கிறார். இவருடைய கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் உண்டு. அவருடைய மரணம் தான் இதுவரை […]
அரைகுறை ஆடையுடன் போன ஷகீலா..!! துரத்திவிட்ட சில்க் ஸ்மிதா..!! இப்படியெல்லாமா செய்தார்..?

You May Like