fbpx

வேட்புமனு தாக்கலுக்கே அதிர்ந்துபோன ஆந்திரா..!! தொண்டர்கள் புடை சூழ பேரணி சென்ற பவன் கல்யாண்..!!

ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜன சேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ பிரம்மாண்ட பேரணி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

ஆந்திராவில் பாஜக 6 தொகுதிகள், தெலுங்கு தேசம் 17 தொகுதிகள், ஜன சேனா கட்சி 2 தொகுதிகளில் களம் காண்கிறது. இதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 10 தொகுதிகள், தெலுங்கு தேசம் 144 தொகுதிகள், ஜன சேனா 21 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாளத்துடன் அவர் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. பவன் கல்யாண் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பீமவரம், கஜுவகா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் தோல்வியடைந்தார். இந்த முறை பிதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அவரை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான எஸ்.வி.எஸ்.என். வர்மா ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மெகா பேரணி ஏற்பாடும் அவருடையதுதான் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!

Chella

Next Post

மிகக் கடுமையான வெப்ப நிலை..!! தமிழ்நாட்டிற்கு இன்றும் மஞ்சள் அலர்ட்..!! மதியம் யாரும் வெளிய போகாதீங்க..!!

Wed Apr 24 , 2024
தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் […]

You May Like