மருத்துவக்கல்லூரி மாணவியை, அவளது காதலனும், காதலனின் நண்பனும் சேர்ந்து ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பாராமெடிக்கல் படித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் சுமார் ஓராண்டு காலமாக பழக்கம் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமன் காதலிப்பதாக கூறிய நிலையில், இளம்பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரும் செல்போனில் பேசி பழகிய நிலையில், கடந்த வாரம் காதலியைப் பார்க்க துமகூருவுக்கு சென்றுள்ளார்.
இருவரும் ஒன்றாக வெளியே சுற்றித் திரிந்த நிலையில், இளம்பெண்ணின் விலை உயர்ந்த செல்போனை சில நாட்கள் தனக்கு இரவல் வேண்டும் என புருஷோத்தமன் கேட்டு வாங்கியுள்ளார். சில நாட்கள் கடந்த நிலையில், காதலியிடம், பெங்களூரு வந்து செல்போனை வாங்கிக் கொள்ளுமாறு புருஷோத்தமன் கூறியுள்ளார். காதலனின் அழைப்பை ஏற்று கடந்த 6ஆம் தேதி அந்த இளம்பெண் பெங்களூரு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து அழைத்துச் சென்று தனது அறையில் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, பஸ் ஸ்டாப்பில் விடுகின்றேன் எனக் கூறி, காதலியை அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு புருஷோத்தமனின் நண்பரான சேத்தனை அறிமுகப்படுத்தி விட்டு, காதலிக்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த மயக்க மருந்து கலந்த ஜூஸைக் கொடுத்துள்ளனர். இளம்பெண் மயக்கமடைந்ததும், இருவரும் சேர்ந்து அவரை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அறைக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் சேத்தனை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.