இன்னும் ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அந்த வகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மலையம்பட்டு கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..? என்றும் காலியாகவுள்ள பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா..? என்றும் சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ”மலையம்பட்டு கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டிய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 16,897 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளுக்கு 7,900 புதிய பணியாளர்கள் மற்றும் சத்துணவு கூடங்களுக்கு 8,997 சமையலர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்” என்று பதிலளித்தார்.
Read More : மும்பை அணி வீரரை திடீரென பேட்டால் அடித்து விரட்டிய எம்.எஸ்.தோனி..!! இணையத்தில் படுவைரலாகும் வீடியோ..!!