பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இங்கு உணவருந்த வருபவர்களுக்கு கைகளில் விலங்கும் போடப்படுவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் செல்ல விரும்பாத இடங்களில் ஒன்றுதான் சிறைச்சாலை. இந்தநிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே உணவகம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏராளமான உணவகங்கள் ஜெயில் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும், அந்த அறையில், வாடிக்கையாளர்கள் உணவருந்துவதற்கு வசதியாக மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், இதுபோன்ற மற்ற சில உணவங்களில், சாப்பாடு பரிமாறுபவர்களுக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில உணவங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கையில் விலங்கும் போடப்படுவது வித்தியாசமாக உள்ளது. இதுபோன்ற உணவங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், சிறைக்கு போக பிடிக்காது; ஆனால் இப்படி வித்தியாசமான சூழலில் குடும்பத்துடன் உணவருந்திவிட்டு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.