fbpx

ஐரோப்பிய ஆல்பத்தை அட்ட காப்பி அடித்த அனிருத்!… சம்பந்தப்பட்டவருக்கே பாடலை அனுப்பி கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அனிருத் இசையில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் இசைதான் காப்பி என தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லியோ படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒட்னிகா. இவர் இசையமைத்து வெளியிட்ட ஆல்பம் `வேர் ஆர் யூ’. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகிய ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ என்ற இணையத்தொடரில் ‘ஐ ஆம் நாட் அவுட்சைடர்’ பாடலாகப் பயன்படுத்தப்பட்டது. இதை ரசிகர்கள் குறிப்பிட்டு அனிருத்தை வறுத்தெடுக்க அதற்கு ஒட்நிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

‘நண்பர்களே, ‘லியோ’ திரைப்படம் குறித்து நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து தளங்களிலும் அந்த பாடலைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகிறீர்கள். எல்லாவற்றையும் பார்த்தேன். அவற்றிற்கெல்லாம் தனித்தனியாக என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்த சர்ச்சைகள் குறித்து எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கச் சிறிது நேரம் கொடுங்கள். அதுவரை நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

Kokila

Next Post

5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!… காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் 4 மடங்கு அதிகரிப்பு!

Fri Oct 27 , 2023
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது மேலும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எல்லை வேலி அருகே ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு […]

You May Like