fbpx

அனிதாவின் மரணம் என் தங்கை வித்யாவின் மரணத்திற்கு இணையான வலியை தந்தது..!! – தவெக தலைவர் விஜய் உருக்கம்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். அவர் கூறுகையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக்கூடாதா. இங்கு எப்போதும் மாறாதது மனித பிறப்பு பசி வேலை உழைப்பு பணம் என சில மட்டும்தான்.

ஜாதியை வைத்து இந்த மண்ணை வேற மாதிரி மாற்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்; மக்களோடு மக்களாக நிற்பதுதான் எங்களது நிரந்தர அரசியல் பாதை. 2026 தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக விழும். திராவிட மாடல் என தந்தை பெரியார் பெயரை சொல்லிக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள்தான் நமது அரசியல் எதிரி.

மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும் என்றார். தகுதி இருந்தும் மாணவர்களுக்கு தடையாக இருக்கிறது நீட். தகுதி இருந்து தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் என் தங்கை வித்யாவின் மரணத்திற்கு இணையான வலியை தந்தது என உருக்கமாக பேசினார்.

Read more : ‘கரெப்ஷன் கபடதாரிகள்’ ஊழல் வாதிகள் தான் இப்போது நம்மை ஆள்கிறார்கள்..!! – திமுகவை தாக்கி பேசிய விஜய்

English Summary

Anita’s death gave me the same pain as my younger sister Vidya’s death..!! – TVK Vijay

Next Post

பெரியார் முதல் அஞ்சலையம்மாள் வரை.. தவெக கொள்கை தலைவர்களாக ஏன் இவர்கள்? - விஜய் விளக்கம்

Sun Oct 27 , 2024
TVK Vijay spoke about why Periyar, Ambedkar, Kamaraj, Velunachiar and Anjali Ammal were accepted as policy leaders.

You May Like