சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் வழங்கப்படும் ரெகுலர் மற்றும் தொலைதூரப் படிப்புகளுக்கு டிசம்பர் 9ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன.