fbpx

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு..!! தாமாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்..!! மதியம் 2 மணி வரை தான் டைம்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பெண் வழக்கறிஞரான வரலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதான போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இன்று (டிசம்பர் 27) மதியம் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Read More : சாட்டையால் அடித்துக் கொண்ட பின் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு பேட்டி..!! 2026 தேர்தலில் தோற்றாலும் கவலையில்லை..!!

English Summary

A bench comprising Justices S.M. Subramanian and Lakshmi Narayanan has taken up the case for hearing on its own initiative.

Chella

Next Post

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியா..? ஜனவரியில் மழை எப்படி இருக்கும்..? டெல்டா மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

Fri Dec 27 , 2024
Another low pressure area is likely to form in early January.

You May Like