மக்களவைத் தேர்தலில் மூன்றாம் அணி அமைக்கும் பாஜக கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் பணிகளை கட்சிகள் வேகப்படுத்தியுள்ளன. இன்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் முடிவடைந்த உடன் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லி செல்கின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பாஜக கூட்டணியில், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பாமக ராமதாஸ், சரத்குமார் என்று தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை பாஜக தேர்தல் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, தேர்தலில் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்து இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.