fbpx

விஜய்க்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!! திடீரென உள்ளே நுழைந்த முதல்வர் ஸ் டாலின்..!! வைரலாகும் பதிவு..!!

‘ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகட்டும்’ என நடிகர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று துவங்கியுள்ளார். அவரது அரசியல் கட்சி அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனக் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அதே நேரம், வெளிநாட்டில் இருக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின், ”40 தொகுதிகளையும் வென்றெடுக்கும் விதமாக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் களப்பணி செய்ய வேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

தமிழக வெற்றி கழகம்; "ஆரம்பமே சரியில்லையே.."! "கட்சி பெயரில் 'க்' இருக்கா.?.." விஜய் கட்சியை கலாய்த்த எஸ்.வி சேகர்.!

Fri Feb 2 , 2024
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் இன்று அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் புதிதாக தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டது. கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அவர் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பற்றி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் தமிழ் […]

You May Like