fbpx

“ஒரு இடத்துல கூட ஜெயிக்கல” வளர்ச்சி என்றால் அண்ணாமலை “complain” குடிக்கிறாரோ..! கலாய்த்து தள்ளிய எஸ்.வி.சேகர்..!

நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக வளர்ச்சியடைவில்லை எனக் கூறினார்.

பாஜகவின் அகில இந்திய தலைமை, மாநிலத் தலைவரை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூறிய எஸ்.வி.சேகர், “டெல்லி தலைமை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒன்று உருவாக்கப்பட்டது. எல்லாமே “paid ஏஜென்சிஸ்”. அண்ணாமலை சம்மந்தப்பட்ட எல்லாமே வளர்ச்சியே இல்லை வீக்கம். “எனக்குப் பிறகு கட்சியே இருக்கக்கூடாது, 40 பேர் நின்னாலும் 39 போரையும் தோக்கடித்துவிட்டு நான் ஒருவன் தான் ஜெயிக்கணும்” இப்படிப்பட்ட கெட்ட புத்திகள் தான் இந்த மாதிரி யோசிக்க வேலை செய்து. ன்ன அண்ணாமலையை விட தமிழிசைக்கே என்னுடைய ஆதரவு.

தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவை அண்ணாமலை உயர்த்திருக்காரு, ஓட்டு விகிதாச்சார உயர்வுக்கு அண்ணாமலை தான் காரணம் எண்று கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, எஸ்.வி.சேகர் கூறியதாவது, “பாஜக முன்னாடி 3.6 சதவீதம் இருந்தது தற்போது 4 சதவீதமாக உயர்ந்திருக்கலாம். ஏனென்றால் இந்த தேர்தலில் கூட்டணியில் நின்னுருக்கிறார்கள், பாமக ஏற்கனவே 5 சதவீதம் வைத்துள்ளது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஒரு 4 சதவீதம், இவை றைண்டும் சேர்த்து 9 சதாவேத்துடன் பாஜகவின் 4 சதவீதத்தை சேர்த்தால் 13 சதவீதம் வந்திருக்க வேண்டும். இதைத்தவிர தாமாக போன்ற காட்சிகள் இருக்கிறது. இதுல என்க வளர்ச்சி இருக்குது. ஒரு இடத்தில் கூட ஜெயிக்குமா, வளர்ச்சியடைந்து விட்டது என்றால், ஒரு வேலை அண்ணாமலை complain குடிக்கிறாரோ என்று கலாய்த்து தள்ளியுள்ளார்.

Kathir

Next Post

தொப்பையில் இருக்கும் கொழுப்பை கரைக்க இந்த டீ குடிங்க..!! எப்படி செய்வது..? என்ன நன்மைகள்..?

Sun Jun 16 , 2024
Just drink this natural tea to melt belly fat and lower belly fat.

You May Like