fbpx

இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை!… கூட்டணி குறித்து கட்சி தலைமையுடன் ஆலோசனை!

கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியின் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணி வேகம் சரியாக சேரவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக பாமக, தேமுதிகவை பாஜக கூட்டணியில் இணைக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமையவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் கூட்டணியில் இருக்கக்கூடிய சிக்கல்களை களைவதற்கு, பல்வேறு இட ஒதுக்கீடு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 17,18 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் முக்கிய ஆலோசனையில் பாஜகவின் செயற்குழு நிர்வாகிகள், தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்றுமாலை டெல்லி புறப்பட்டு அன்று இரவே அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதே போல் இரண்டு நாள் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு பாமக, தேமுதிகவை உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

e-Kyc இணைக்க வேண்டுமா...? விவசாயிகளே இன்று காலை 10:30 மணி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்...!

Fri Feb 16 , 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் […]

You May Like