தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக வளர்ச்சி போதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு கட்சியை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். லண்டனில் பா.ஜ.க ஏற்பாடு செய்த மாநாட்டிலும் அவர் பேச்சாளராக இருந்தார்.
அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவின் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நான்கு பேர் கொண்ட பாஜக குழுவில் ஒருவராக அண்ணாமலை பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது., ஜூலை 28 முதல், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பதயாத்திரை’யை துவக்கி வைக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் சி.ராஜீவ் பேசுகையில், “பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல், அக்கட்சி தீவிரமடைந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆளும் தி.மு.க.வுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறார். மேலும் அண்ணாமலை ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டால், அது மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாய்ப்புக்கு பெரும் வலு சேர்க்கும் என்றார்.