fbpx

மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை..? தமிழக பாஜகவின் புதிய தலைவர் வரும் 9ஆம் தேதி அறிவிப்பு..?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது, அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணியின் இணைவோம் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை போட்டதாக கூறப்படுகிறது.

இதனால், டெல்லிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். பின்னர், மீண்டும் சென்னை திரும்பிய அண்ணாமலை, ”அமித்ஷாவிடம் பேசிய அனைத்தையும் நான் சொல்ல முடியாது. நான் ஒரு சாதாரண பாஜக தொண்டனாக கூட இருக்கிறேன் என்று கூட சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டின் நிலவரத்தை டெல்லி மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். இனி அவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்தே அண்ணாமலை நீக்கப்படுவது உறுதி என தகவல்கள் பரவின.

இதையடுத்து, சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதில், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், தமிழிசை ஆகியோர் பட்டியலில் உள்ளனர். மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் பாஜக மாநில தலைவர் பதவி வகித்துள்ளார் அண்ணாமலை. இந்நிலையில், புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் 9ஆம் தேதி பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அண்ணாமலைக்கு மாற்று பதவி வழங்குவது குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

Read More : ’என் விதி முடிய போகுதுனு நினைச்சேன்’..!! மூகாம்பிகை அம்மனின் அதிசயம்..!! 5 நிமிடங்களில் எல்லாம் மாறிப்போச்சு..!! இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

It has been reported that Tamil Nadu BJP leader Annamalai has been stripped of his position and may be given the post of Union Minister.

Chella

Next Post

தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பிரச்சனையை கையிலெடுக்கும் திமுக..!! எதுக்கு இந்த கபட நாடகம்..? அண்ணாமலை சரமாரி தாக்கு..!!

Wed Apr 2 , 2025
What steps did DMK take to restore Katchatheevu during its tenure in the Union Cabinet over the past 40 years?

You May Like