fbpx

Covai: அதிகாரிகள் உதவியுடன் பிரமாண பத்திரம் மாற்றம்…? பகீர் குற்றச்சாட்டு…!

அண்ணாமலை தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அதிமுக, நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி, வழக்கறிஞர் விஜயராகவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அண்ணாமலையின் வேட்புமனுவுடன் இருந்த பிரமாண பத்திரம் நீதிமன்றத்துக்குப் பயன்படுத்தும் பத்திரத்தில் இருந்தது. ஆனால் நீதிமன்றப் பயன்பாட்டுக்கு அல்லாத பத்திரம் மூலம் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அவர் தவறான பத்திரத்தை இணைத்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனையின்போது மாவட்டத் தேர்தல் அலுவலர் இதை கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அண்ணாமலையின் மனுவை நிராகரிப்பதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்புமனுக்களுக்கும் ஒரே பிரமாண பத்திரம் தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. காலையில் ஒரு மனுவை நிராகரித்த தேர்தல் அலுவலர் மற்றொன்றை ஏற்பதாக கூறினார்.

மனுவுடன் 200 ரூபாய்க்கான பத்திரத்தில் இருந்த பிரமாண பத்திரம் மட்டுமே இருந்தது. தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க சென்றபோது 100 ரூபாய் பத்திரத்திலான சரியான பிரமாண பத்திரம் அவரது மேஜையில் இருக்கிறது. பின்னர் அதுவே மாலை 5.17 மணிக்கு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வது ஆதாரபூர்வமாக தெரிந்துவிட்டது. அதிகாரிகளின் உதவியுடன் பிரமாண பத்திரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

Metro: சென்னை தனியார் கிளப் மேற்கூரை விழுந்த விபத்து...! மெட்ரோ பணி தான் காரணமா...?

Fri Mar 29 , 2024
சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு […]

You May Like