fbpx

ADMK | “அண்ணாமலை காலி பெருங்காய டப்பா; உள்ள ஒன்னும் இருக்காது”… முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.!!

ADMK: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்தல் நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் முழுவிச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வாக்கு சேகரிப்பு ஒருபுறம் நடைபெற்றாலும் தங்களது எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கி விமர்சனம் செய்வது மற்றொருபுறம் நடைபெற்று வருகிறது

கடந்த தேர்தல்களில் ஒரே அணியில் பயணித்த அதிமுக(ADMK) மற்றும் பாஜக இந்தப் பாராளுமன்றத் தேர்தலை எதிரெதிர் துருவங்களாக சந்திக்கிறது. இரண்டு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காலி பெருங்காய டப்பா என விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய உதயகுமார் அண்ணாமலை பாஜகவின் ரெடிமேடு தலைவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை ஒரு காளி பெருங்காயம் டப்பா அதில் வாசனை தான் வரும். திறந்து பார்த்தால் உள்ளே ஒன்றும் இருக்காது. அவருக்கு ஆளுமை பண்பும் கிடையாது. அவரால் எந்த ஒரு பலனும் நடக்காது என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Read More: “மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” -இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்!

Next Post

காஷ்மீர் : பள்ளி மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 4 பேர் பலி.. பலர் மாயம்!!

Tue Apr 16 , 2024
ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஜீலம் ஆறு உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜீலம் ஆற்றில் ஸ்ரீநகரில் உள்ள கந்த்பாலில் இருந்து பட்வாராவுக்கு 12 பள்ளி மாணவர்கள் உட்பட பலர் படகில் பயணம் செய்தனர். படகு ஆற்றின் […]

You May Like