தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.3.2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக பல்வேறு மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் டெல்லி மற்றும் தெலங்கானாவில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : Holiday | தமிழ்நாட்டில் மார்ச் 8ஆம் தேதி பொதுவிடுமுறை..? தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனை..!!