fbpx

மற்றொரு வீரரும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக அறிவிப்பு..!! யார் தெரியுமா..?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், “பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே, நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்” என பதிவிட்டார்.

பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து வீரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், அவர்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Sat Dec 23 , 2023
முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், 5 முறை வெள்ளக்கோயில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான துரை. ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்த துரை ராமசாமி 10 ஆண்டு காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிளவுபட்டபோது காமராஜரின் என்சிஓ-வில் சேர்ந்தார். பின்னர் காமராஜரின் திடீர் மறைவுக்குப் பிறகு, மூப்பனாருடன் சேர்ந்து […]

You May Like