fbpx

மக்களே… நாளை தமிழகம் முழுவதும் கடைகள் இயங்காது என அறிவிப்பு…!

வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்று கூட உள்ளதால், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படவுள்ளது.

நாளை 41வது வணிகர் தின மாநில மாநாடு மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், வணிகர்கள் மீதான அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மாநாடாக, விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள வரிப்பிரச்சனைகள், ரவுடிகளால் தொல்லை, அதிகாரிகளால் தொல்லை ஆகியவற்றிலிருந்து வணிகர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தான் 41வது மாநில மாநாட்டில் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அதனை சட்டமாக்க வேண்டுமென கோரிக்கை வணிக சங்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 41-வது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதையொட்டி நாளை கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்று கூட உள்ளதால், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படவுள்ளது.

Vignesh

Next Post

21வயது ஆர்த்திக்கு 40வயது சுரேஷ் பாபுவுடன் கள்ளத்தொடர்பு..! உல்லாசத்தில் இருப்பதை கண்டித்த தந்தை..! தலைக்கேறிய போதை..!

Sat May 4 , 2024
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி தனது 2வது மகளுடன் பிரிந்து சென்று விட்டார். மூத்த மகளான ஆர்த்தி தந்தையுடன் வசித்து வந்தார். 21 வயதான ஆர்த்தி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம்  தேதி, காலையில் தந்தை சுரேஷ்குமார் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினருக்கு ஆர்த்தி தெரிவித்து உள்ளார். […]

You May Like