fbpx

பதைபதைக்கும் வீடியோ…! முதலையின் வாய்க்குள் கைவிட்ட மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர்…! ஒரே நொடி தான்…!

விலங்குகளை பொறுத்தவரை பொதுவாக கணிக்க முடியாத ஒன்று என்றே கூறலாம். நான்றாக பழகி கொண்டிருக்கும், ஆனால் சில சமயங்களில் தாக்குதல் நடத்தும், சமீபத்தில் வளர்த்த நபரையே ஒரு நாய் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இருந்தாலும் மக்கள் செல்லப்பிராணிகளை போல் பல விலங்குகளை வளர்க்கிறார்கள். இது பேராபத்தில் முடியும் என்பதை போன்ற செய்தியையும் நாம் கேள்வி பட்டிருப்போம்.

உயிரியல் பூங்கா காவலர்களுக்கும் இதே நிலைமை தான். விலங்குகளை பராமரிக்கும் மற்றும் உணவளிக்கும் பொறுப்பு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்த காட்டு மிருகங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கி பேரிழப்பை ஏற்படுத்தலாம்.தற்போது இதுபோல ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது, அதில் ஒரு மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர் மீது முதலை திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது.

தாய்லாந்தின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான சியாங் ராயில் உள்ள ஃபோக்காதாரா முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஊர்வன வாயில் தங்கள் தலைகளையும் கைகளையும் வைப்பது போன்ற ஆபத்தான சாதனைகளில் குறிப்பாக முதலைகளுடன் ஈடுபடுவதில் திறமையானவர்கள்.

இதுபோன்ற ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது, மிருகக்காட்சிசாலையில் பயிற்சி பெற்ற முதலை, பயிற்சியாளரின் கையைக் கடித்ததால், பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர் தனது கையை முதலையின் வாய்க்குள் நுழைத்து, கூட்டத்தினரிடம் ஏதோ சைகை செய்வதோடு பார்க்க கடினமாக இருக்கும் வீடியோ தொடங்குகிறது. பயிற்சியாளர் முதலை வாய்க்குள் இருக்கும் கையை மேலும் நுழைக்கிறார், அப்போது எதிர்பாராதவிதமாக முதலை கண் இமைக்கும் நேரத்தில் அதன் வாயை மூடுகிறது, கூர்மையான பற்களுக்கு நடுவே பயிற்சியாளரின் கை மாட்டிக்கொள்கிறது, பிறகு எப்படியோ தனது கையை முதலையின் கொடூரமான பிடியில் இருந்து விடுவித்துக் கொள்கிறார், பிறகு ரத்தக்காயங்களுடன் அந்த இடத்தை விட்டு செல்கிறார்.

இப்படி பார்ப்பவர்களையே அதிரவைக்கும் வகையில் அந்த காட்சி அமைந்துள்ளது. இந்த பயங்கரமான விடியோவை குன் புசாவிட் என்பவர் பதிவு செய்துள்ளார். அவர் தனது மனைவி நோக் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் போக்காதாரா முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

Kathir

Next Post

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள்!… மரணத்தை ஏற்படுத்துமாம்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Mon Aug 28 , 2023
உணவில் கூடுதலாகத் தூவும் உப்பு, அகால மரணத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் உப்பு சேர்ப்பது உடலில் எத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அறிய 500,000 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வு பற்றிய ஒரு கட்டுரையை ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் வெளியிட்டது. அந்த ஆய்வில், உப்பை எந்த அளவு அதிகம் உணவில் சேர்க்கிறோமோ அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் […]

You May Like