fbpx

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமா..? ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்ட நடைமுறை அமுலுக்கு வருகிறது.

தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது ஆண்டு வருமானம் ரூ.7,00,100ஆக இருந்தாலும் அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், வருமான வரி விலக்கு வரம்பான ரூ.7 லட்சத்துக்கு மேல் சற்று கூடுதலாக வருவாய் உள்ளவர்களுக்கு நிவாரண வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படிம் ஆண்டு வருவாய் ரூ. 7,00,100 இருந்தால், கூடுதல் வருமானமான ரூ. 100 – ஐ மட்டும் வரி செலுத்தினால் போதும் என்று கூறப்படுகிறது. ரூ.7,27,700 வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த நிவாரண வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மக்களவையில் 64 திருத்தங்கள் கொண்ட புதிய நிதி மசோதாவை மத்திய அரசு கடந்த வெள்ளியன்று நிறைவேற்றியது. அதில் இந்த மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரிமுறையின் கீழ் ரூ. 3 லட்சம் வரையில் வரி கிடையாது. ரூ. 3 லட்சம் – ரூ. 6 லட்சம் வரையில் 5 சதவீதம், ரூ.6 லட்சம் – ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.9 லட்சம் – ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் – ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சம் மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய வரி முறையில் 6 வரம்புகள் இருந்த நிலையில், தற்போது அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பழைய வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய வரி முறையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இதுவரையில் பழைய வரி முறை அடிப்படையானதாக இருந்த நிலையில், இனி புதிய வரி முறை அடிப்படையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மெகா காலியிடங்கள்..!! மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Mar 27 , 2023
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Investigator Grade 2, Accountant, Technical Assistant காலியிடங்கள்: மொத்தம் 5,369 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே […]

You May Like