fbpx

பெங்களூரில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பா?… ஹோட்டலுக்கு வந்த மிரட்டல்!… தீவிர கண்காணிப்பில் போலீசார்!

Bengaluru: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே போன்று கடம்பா என்ற ஹோட்டலுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த மார்ச் 1-ந் தேதி ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து 2 பயங்கரவாதிகளை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பரபரப்பு அடங்காத நிலையில், பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ‘கடம்பா’ என்ற தனியார் ஹோட்டலிலும் குண்டுவெடிக்குமென ஜாலஹள்ளி காவல்நிலையத்திற்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இதையடுத்து நேற்று மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் தொடர்ந்து ஹோட்டல் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Readmore:9 நிமிடங்களில் 5 முறை!… அடுத்தடுத்து பூமியை குலுக்கிய நிலநடுக்கங்கள்!… பீதியில் மக்கள்!

Kokila

Next Post

பெண் கொல்லப்பட்ட சம்பவம்...! அண்ணாமலை வெளியிட்ட வீடியோ ஆதாரம்...!

Tue Apr 23 , 2024
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

You May Like