திருப்பத்தூரில் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 10 பேர் மீது ஆம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மளிகை தோப்பு – துத்திப்பட்டு இணைக்கக் கூடிய பாலாற்று பகுதியில் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது, அங்கிருந்த மக்கள் மற்றும் பெண்கள் மன்சூர் அலிகானுடன் செல்ஃபி எடுக்கக்கூடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியினர் மீது ஆம்பூர் விஏஓ ராஜ்குமார், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சி சார்ந்த 10 நபர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த 19ஆம் தேதி மன்சூர் அலிகான் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : ’10 நாளைக்கு முன்னாடி தான்’..!! ’பயமா இருக்கு’..!! டேனியல் பாலாஜி குறித்து நடிகை பகீர் வீடியோ..!!