fbpx

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் காயம்..

புதுக்கோட்டை கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்..

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.. இன்று காலை தேரை இழுக்க தொடங்கிய சற்று நேரத்திலேயே கோயிலுக்கு அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.. வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் இதில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இதனிடையே இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர் முறையாக பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Maha

Next Post

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! Engineering முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

Sun Jul 31 , 2022
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Technician (Diploma) Apprentices, Graduate Apprentices பணிக்கு 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் […]

You May Like