fbpx

சீனாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்..! இந்த முறை 5.5 ரிக்டர் அளவு..! அச்சத்தில் மக்கள்..!

வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 111க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடமேற்கு சீனாவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் (CENC) தெரிவித்துள்ளது. 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள கிஜில்சு கிர்கிஸ் தன்னாட்சி மாகாணத்தின் செவ்வாய்க்கிழமை காலை 9:46 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 40.02 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக CENC தெரிவித்துள்ளது.

முன்னதாக வடமேற்கு சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் 111க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இரண்டு வடமேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரபூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. சீனாவின் பேரிடர் தடுப்பு, குறைப்பு மற்றும் நிவாரணத்திற்கான தேசிய ஆணையம் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம், நிலை-IV பேரிடர் நிவாரண அவசரநிலையை செயல்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 ரிக்டர் அளவுகோல் என்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள லின்சியா, கன்சுவில் செவ்வாய்க்கிழமை காலை வெப்பநிலை மைனஸ் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த வாரம் தொடங்கிய குளிர் அலையானது நாடு முழுவதும் தொடர்ந்து வீசுவதால், சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உறைபனி வெப்பநிலையுடன் போராடி வருகின்றன.

நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு நிலநடுக்கம் தாக்கியதின் சேதம் குறித்த தகவல் எதுவும் முழுமையாக இல்லை.

Kathir

Next Post

ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி!... கடவுளின் அன்பை பெறவிரும்பும் மக்களை தடுக்கக்கூடாது!… போப் பிரான்சிஸ்!

Tue Dec 19 , 2023
கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம் என்று போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளார். இதுதொடர்பாக வாட்டிகன் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள் மத்தியில் திருமணத்தின் சடங்குடன், மற்ற சடங்கை குழப்பாமல் இருந்தால், சில சூழ்நிலைகளில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கலாம். அதே சமயம் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் […]

You May Like