fbpx

தமிழ்நாட்டில் மேலும் ஒரு பயங்கரம்..!! பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!! கடலூரில் பெரும் பரபரப்பு..!!

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர். இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

English Summary

The incident in Cuddalore in which a gang of 4 members attacked Sivashankar, an administrator from Bamaga, with a sickle has created a lot of excitement.

Chella

Next Post

”தமிழ்நாட்டில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை”..!! ”கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுகிறது”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

Sat Jul 6 , 2024
In Tamil Nadu, murder and robbery have become normal. Life of the common man is not guaranteed.

You May Like