ஆசிய கோப்பையில் இன்றைய தினம், ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3:53.329 நிமிடங்களில் அடைந்து அர்ஜுன் சிங், சுனில் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3ம் இடம் பிடித்தது. இதன் மூலம் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.
இதன்மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் புள்ளிப்பட்டியலில் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது இந்தியா.
ஆசிய கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் நேபாளுடன் இந்திய தற்போது மோதி வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் வெறியாட்டம் ஆடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் (8 பவுண்டரி, 7 சிக்ஸர்) 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி ஆடி வருகிறது. தற்போது வரை நேபாளம் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.