காமன்வெல்த் போட்டியில், 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா வெள்ளிப்பதக்கம் வென்றார்..
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி வருகின்றனர்..
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.. 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா வெள்ளிப்பதக்கம் வென்றார்.. பந்தய தூரத்தை 43 நிமிடம் 38 வினாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்தார்.. காமன்வெல்த் 2022 போட்டியில் இதுவரை 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என இதுவரை இந்தியா 27 பதக்கங்களை வென்றுள்ளது..