படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார்.
நிங்போவில் உள்ள NBX படகோட்டம் மையத்தில் நடந்த ஆசிய விளையாட்டு ஆண்கள் படகு போட்டி(Windsurfer) RS:X நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த ஈபத் அலி வெண்கலம் வென்றார். இதில் ஈபத் அலி 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், தாய்லாந்தின் நத்தபோங் ஃபோனோப்பராட் 29 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார், தென் கொரியாவின் சோ வோன்வூ 13 உடன் தங்கம் வென்றார்.
படகு போட்டியில் பெண்கள் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் ஏற்கனவே வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.