fbpx

சர்ச்சை டாக்டர் ஷர்மிகாவுக்கு அடுத்த சிக்கல்.. வீடியோவை பார்த்து பாதிக்கப்பட்டதாக புகார்..

சமூக வலைத்தளங்களில் சித்த மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமானவர் சித்த மருத்துவர் ஷர்மிகா.. பல யூ டியூப் சேனல்களும் இவரிடம் தொடர்ந்து பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பியதால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.. ஆனால் ஒரு கட்டத்தில் ஷர்மிகா வழங்கிய பல்வேறு மருத்துவக்குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. குறிப்பாக பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்.. ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடிவிடும்.. நுங்கு சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் பெரிதாக மாறும் என்று அவர் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தது..

மருத்துவக்குறிப்பு என்ற பெயரில் தவறான கருத்துக்களை பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் , ஷர்மிகா மீது இந்திய மருத்துவ ஆணையரகத்தில் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ஷர்மிகாவின் வீடியோக்களில் கூறிய மருத்துவக் குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே சித்த மருத்துவ கவுன்சிலின் விசாரணையில் இருந்துவரும் ஷர்மிகாவுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது..

Maha

Next Post

கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்.. நாளை முதல் விசாரணையை தொடங்குகிறது மனித உரிமை ஆணையம்..

Mon Apr 10 , 2023
பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது. சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து […]

You May Like