fbpx

ஐபிஎல் வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைத்த HIT MAN!… புள்ளி பட்டியலில் முதலிடம்!

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வாங்கிய இந்தியர், என்ற சாதனையை படைத்த HIT MAN ரோகித் ஷர்மா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒருமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நிற்க, மறுமுனையில் பிரித்வி ஷா(15), மனீஷ் பாண்டே(26), யஷ் துல்(2), ரோவ்மன் பவல்(4), லலித் யாதவ்(2) ஆகியோர் சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த் அக்ஸர் படேல் இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இதையடுத்து 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் 31 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் குவித்தார். ஒருபுறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, கடைசி பந்தில் 4 விக்கெட்டை இழந்து மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. இதையடுத்து, இந்த லீக் ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது ரோகித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா பெறும் 19ஆவது ஐபிஎல் ஆட்டநாயகன் விருது இதுவாகும். முதல் வெற்றி, முதல் அரைசதம், முதல் பிளேயர் ஆஃப் தி மேட்ச். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா 19 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். இதேபோல், 17 விருதுகளுடன் தல தோனி 2வது இடத்திலும், 16 விருதுகளுடன் யூசப் பதான் 3வது இடத்தில் உள்ளார்.

Kokila

Next Post

மின்வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! 6% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்!... தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!

Thu Apr 13 , 2023
மின்வாரிய ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி 6% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்தது. இந்நிலையில், மின் […]

You May Like