விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் சேமித்து வைத்திருந்த இடம் வெடித்துச் சிதறியதில், 3 அறைகள் தரைமட்டமானது. அதிகாலை என்பதால், தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே, கீழதிருத்தங்கலில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து இரண்டே நாட்களில் மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? இனி பயன்படுத்த முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!