சிவகாசியில் 12-ம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது.. கடந்த 13-ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த திங்கள்கிழமை திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஹாஸ்டலில் 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அன்றைய தினமே கடலூரில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாய் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்..
இந்நிலையில் சிவகாசி அருகே அய்யம்பட்டி பகுதியில் உள்ள 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கண்ணன் மற்றும் மீனா தம்பதிய அங்குள்ள பட்டாசு ஆலையில் தினக்கூலியாகப் பணிபுரிகின்றனர்.. அவரின் இளைய மகளான அந்த மாணவி, தனது பெற்றோர் வேலையில் இருந்தபோது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்..
நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, வீட்டிற்கு திரும்பிய போது, தனது பாட்டி வெளியே சென்ற போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய மூதாட்டி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உதவிக்கு அழைத்தார், அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை..