fbpx

மகா கும்பமேளாவில் மீண்டும் பயங்கர தீவிபத்து..!! அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!! 10 தீயணைப்பு வாகனங்கள்..!! நடந்தது என்ன..?

மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக மீண்டும் அங்கு தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் VVIP-க்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீக்கிரையாகின. இதில், பக்தர்கள் யாரேனும் சிக்கியுள்ளார்களா..? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் சிறிது நேரத்திலேயே கூடாரம் முழுவதும் மளமளவென ஏறிய தொடங்கியது. இதையடுத்து, மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு ஓடத் தொடங்கினர். இதனால், தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்பொழுது, கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜனவரி 30ஆம் தேதி, செக்டார்-22 இல் உள்ள பல பந்தல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில், 15 கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. அதற்கு முன்னதாக, ஜனவரி 19ஆம் தேதி 19-வது பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது, அப்போது ஒரு முகாமில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 18 முகாம்கள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

Read More : காதல் மனைவியை நடுரோட்டில் வழிமறித்து குத்திக் கொன்ற கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!! தவிக்கும் 6 வயது குழந்தை..!!

English Summary

This is the 4th time that a fire has broken out at the Maha Kumbh Mela. In this fire, all the tents set up for VVIPs were gutted.

Chella

Next Post

ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன..? காரணங்கள்.. அறிகுறிகள்.. தவிர்க்கும் வழிமுறைகள்! 

Fri Feb 7 , 2025
Smartphone vision syndrome: Know the causes, symptoms, treatment and prevention tips

You May Like