fbpx

துக்க வீட்டில் மேலும் இப்படி ஒரு சோகமா..? ஃப்ரீசர் பாக்ஸில் உடல்..!! திடீரென கட்டான கரெண்ட்..!! கோவையில் ஷாக்..!!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர், கடந்த சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, உயிரிழந்த ராமலட்சுமி உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், காலை துக்க நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு ஏராளமான பேர் வந்திருந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் நேற்று காலை 10.30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரீசர் பாக்ஸ் ஏசி கிடைக்காது என்பதால், ஜெனரேட்டர் மூலம் பிரேசர் பாக்ஸ்-க்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது.

ராமலட்சுமி உடல் இருந்த அறையில் இருந்த உறவினர்கள் வெளியே ஓடினர். சிலர் ஒரு அறையில் சிக்கிக்கொண்டனர். இதில் பத்மாவதி, பானுமதி, ஶ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்டனர். அவர்களை உறவினர்கள் மீட்டனர். உள்ளே தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி (55) உயிரிழந்தார்.

மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற உறவினர்கள் தீப்பிடித்து எரிந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பெரும் சோகம்..!! ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் திடீர் மரணம்..!! திரையுரலகினர் அஞ்சலி..!!

English Summary

Relatives rescued the 4 people who were struggling with burns inside and took them to the hospital. However, Padmavati (55) died there without treatment.

Chella

Next Post

10ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

Sat Nov 16 , 2024
Garden Reach Shipbuilders and Engineers Limited has released a new job notification for employment.

You May Like