கடந்த சில மாதங்களாக சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் காலமானார். தற்போது வரை சினிமா பிரபலங்கள் இந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில், தற்போது மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது பின்னணி குரல் கலைஞர் விஜயகுமார் (70) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் அர்னால்டு, சில்வர்ஸ்டர், ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர். அதுமட்டுமின்றி பூம்பா, பென்10 உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திர படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். தற்போது இவரின் இறப்பு செய்தி திரைப் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.