fbpx

உயிரினங்களை உயிரோடு உறைய வைத்த அண்டார்டிகா..!! பனிப் பாறைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் உலகம்..!!

இப்போது பனியால் சூழப்பட்டு, மனிதர்களே வாழ முடியாத நிலையில் இருக்கும் அண்டார்டிகாவில், ஒரு காலத்தில் தாவரங்களும், உயிரினங்களும் வாழ்ந்துள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கான சான்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் தாவரங்கள் இருந்துள்ளன. அங்கு விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் பனி சூழ்ந்ததால் அவை அப்படியே உறைந்து போய்விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இப்போது அண்டார்டிகாவின் பனிக்கட்டி அடுக்கின் ஆழத்தில் அமைந்துள்ள உலகின் மிக பழமையான உறைந்து போன படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் விசித்திரமானதாக இருப்பதாகவும், இந்த பழைய சொர்க்கத்தை கண்டுபிடித்தது மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த பண்டைய சொர்க்கம் செவ்வாய் கிரகத்தை விட ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

காலநிலை மாற்றம் என்பது எப்போதுமே நிகழக்கூடிய ஒன்று. அது எத்தகைய விளைவை உண்டாக்கும் என்பதற்கு இந்த பண்டைய சொர்க்கம் ஒரு சாட்சி என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், நாம் வாழும் உலகம் அண்டார்டிகாவின் குளிரிலிருந்து தப்பி கதகதப்பான சூழலில் இருப்பதால் நமக்கு பாதிப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆய்வின்படி, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் பிரபஞ்சம் வெப்பமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால், அதையும் மீறி எப்படி பனி உருவாகத் தெராடங்கியது என்பது தெரியவில்லை. 14 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்று முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்ததைப் போன்ற வளிமண்டல நிலைமைகளை உருவாக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த புதை பண்டைய உலகத்தை மேலும் ஆய்வு செய்வது பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அண்டார்டிகாவில் பனி கட்டிகள் ஏன் நகர்கிறது, காலநிலை மாற்றத்தால் நாம் வாழும் உலகம் என்ன மாதிரியான மாற்றங்களை சந்திக்கப் போகிறது போன்றவை இந்த பழங்கால சொர்க்கத்தை ஆய்வு செய்வதன் மூலம் நமக்கு தெரிய வரும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

உலக வெப்பமயமாதல் என்னும் பிரச்சனை இப்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அண்டார்டிகா பனிக்கடியில் உறைந்து போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகம் நமக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் எதனால் ஏற்படுகிறது, இந்த இரண்டையும் சம நிலையில் வைத்துக் கொள்வது எப்படி போன்ற படிப்பினைகளை இந்த பழைய சொர்க்கம் தொடர்பான ஆய்வுகள் நமக்கு கொடுக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..!! கோபத்தில் வெளியேறிய போட்டியாளர்..!! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்..!!

Fri Oct 27 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒருபுறம், மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்க… டாஸ்குகளை பிக்பாஸ் நாளுக்கு நாள் கடுமையாக்கி கொண்டே செல்கிறார். இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில், யாரும் எதிர்பாராத விதமாக பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், மாயா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்கிறார். இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்குள் நடந்த போட்டியில் ஸ்மால் […]

You May Like