fbpx

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…..! காரணம் இதுதான்…..!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி உட்பட முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ உள்ளிட்டவைகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் தமிழகம் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் மறுபடியும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனைகள் ஈடுபட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

ஆர்.எம். காலணியில் இருக்கின்ற அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரத்தில் அவர் பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற அவருடைய வீடு சுகாதார ஆய்வாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருவது தற்போது தெரியவந்துள்ளது. நோய் தொற்றுக் காலத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக மகேஸ்வரியின் மீது புகார் எழுந்துள்ளது.

அதேபோல கரூர், ஈரோடு சாலையில் எடுக்கின்ற சக்தி மெஸ் கார்த்தி இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சென்ற மாதம் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இல்லத்தில் மறுபடியும் சோதனை நடந்து வருகிறது. துணை ராணுவ படையைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா..? சிறந்த பைனான்ஸ் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரியுமா..?

Fri Jun 23 , 2023
இ-ஸ்கூட்டர்கள் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் விதைத்து இருந்தாலும், மக்களிடத்தில் அதிகம் கொண்டு சென்றது ஓலா தான். அதனைத் தொடர்ந்து ஏதர் நிறுவனமும் பிரலமடைந்தது. இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு, எந்த ஸ்கூட்டர் சிறந்தது. வங்கி கடன்கள் எவ்வளவு கிடைக்கும் […]

You May Like