fbpx

பதற்றம்: எங்கும் ஒலிக்கும் சைரன் சத்தம்..! ஹமாஸின் பொருளாதார அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா சுட்டுக் கொலை.., இஸ்ரேல் தகவல்…!

கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. அதன்படி, காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 7ம் தேதி சனிக்கிழமை தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் மூன்றாவது நாளாக இன்றும் ஓயாமல் இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போரில் பலரும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் ஹமாஸின் பொருளாதார அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். இது ஹமாஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஹமாஸ் தலைவர் ஜகாரியா அபு மாமரை கொன்றதாக IAF கூறியது. மறுபுறம், இதுவரை சுமார் 900 இஸ்ரேலிய மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தெற்கு நகரமான பீர்ஷெபா மற்றும் டெல் அவிவ் உட்பட நாடு முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்படும் ராக்கெட்டுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையுமாறு தனது குடிமக்களை எச்சரிக்க இஸ்ரேல் சைரன்களை ஒலிக்கச் செய்கிறது என்று கூறப்படுகிறது.

Kathir

Next Post

ஆயுர்வேத மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருக்கிறதா....?

Tue Oct 10 , 2023
தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் […]

You May Like