ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து அதே கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படை ஆனது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஆகமம் பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்கள் குறித்து கண்டறிய சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், அந்த குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும், அந்தந்த கோயில்களின் சொத்து பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.