fbpx

”எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க பேசிக்கலாம்”..!! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! எதற்காக தெரியுமா..?

மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. மேலும், அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த நவ. 19ஆம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால், காலத்தை வீணடிப்பதற்காகவே ஆளுநர் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும், தற்போது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரும், முதலமைச்சரும் நேரில் பேச வேண்டும் என முன்னதாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில், நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மத்திய குழு ஆய்வு நடைபெற்று வருவதால், வேறு ஒருநாள் சந்திப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

’இந்த 2 நாட்களும் கனமழை வெளுத்து வாங்கப்போகுது’..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Wed Dec 13 , 2023
தமிழ்நாட்டில் வரும் 16, 17ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் (டிச.13), நாளையும் (டிச.14) ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

You May Like