பஞ்சாப் மாநிலத்தில் கனமழையால் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பீதியை உண்டாக்கியுள்ளது.
பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, இரண்டு மாடி வீடு ஒன்று சில நொடிகளில் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடு கராரில் உள்ள பஞ்சவதி என்கிளேவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நொடிப்பொழுதில் இடிந்து விழும் இந்த வீட்டின் வீடியோ காட்சிகள் அனைவரையும் பீதியில் உள்ளாக்கியுள்ளது.