fbpx

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களே..!! இனி அனுமதியின்றி இதையெல்லாம் செய்யக் கூடாது..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தை உருவாக்கி, பதிவு செய்வது அவசியமாகும். இந்த சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்களாவது இருக்க வேண்டும்.

துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள். குடியிருப்போரை தொல்லை செய்யும் வகையில் ஒலி எழுப்பக் கூடாது. உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டே செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும். பழைய கட்டிங்களை மறுகட்டுமானம் செய்ய குடியிருப்பில் இருக்கும் ஒரு பகுதியினரின் கோரிக்கை பேரில் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். விளம்பரம் உள்ளிட்ட போஸ்டர்களை சங்கத்தின் அனுமதியின்றி வைக்கக் கூடாது. ஜன்னல் மற்றும் பால்கனியில் துணி காயவைப்பது பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

கட்டிடத்தில் இருந்து யாரேனும் வெளியேற மறுத்தால் அவரை போலீஸ் துணையுடன் சங்கம் வெளியேற்றலாம். விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறை அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். மின்சார இணைப்பு, அலைபேசி நிறுவுதல், டிவி ஆன்டனா, ஏசி உள்ளிட்டவற்றிற்கு சுவர்கள் மற்றும் மேல்தளத்தின் மூலம் வயர்களை இழுக்க சங்கத்தினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது” என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

Read More : இளம்பெண்களுடன் நிர்வாண வீடியோ கால்..!! ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்த இளைஞர்..!! கடைசியில் வைத்த ட்விஸ்ட்..!!

English Summary

The Tamil Nadu Government has published the provisions of the Apartment Owners Protection Act.

Chella

Next Post

’மசாஜ் சிறப்பா இருந்துச்சு’..!! ’இப்போ அது எங்களுக்கு வேணும்’..!! பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்கள்..!! நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Sat Sep 28 , 2024
The youth asked the women working at the massage center to have sex after the massage.

You May Like