fbpx

Patanjali | “பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்” – உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்!

பொது மன்னிப்பு கோரும் விளம்பரத்தை பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி போல்ஸ்லி,  பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா?  என கண்டனம் தெரிவித்தார்.  விளம்பரங்களின் நகலை பெரிதுபடுத்தி எடுத்துவரக்கூடாது என தெரிவித்த நீதிபதி போல்ஸ்லி பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பர பத்திரத்தை எடுத்துவரவேண்டும் அப்போது தான் சரியான அளவு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் 170வது பிரிவை திடீரென நீக்கியது ஏன் என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பிரிவை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டும் அதனை செய்யாதது ஏன் என்றும் வினவினர். பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்த அதே அளவு மன்னிப்பு கேட்டு, அந்த துண்டறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 30-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Next Post

மதுரை சித்திரை திருவிழாவில் பயங்கரம்... கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நிகழ்ந்த கொலை! – பக்தர்கள் அதிர்ச்சி!

Tue Apr 23 , 2024
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது வாலிபர் ஒருவர் பட்டாக் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில், இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த […]

You May Like