fbpx

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு..

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தரிசு நிலங்களை விளை நிலங்க ளாக மாற்ற விவசாயிகள், ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என கடலூர் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் 2020-2021-ம்ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத் தில், இத்திட்டத்திற்காக அரசு ரூ. 69.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 555 ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விளைநிலங்களாக மாற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு 1,812 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசிடமி ருந்து ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்படவுள்ளது. சாகுபடிக்கு உகந்த தரிசு மற்றும்இதர தரிசு நிலங்கள் உள்ள அனைத்து வட்டார விவசாயிகள், தாமாகவே முன்வந்து ‘உழவன் செயலி’ மூலம் பதிவு செய்யலாம் அல்லது விருப்பமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும்வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன், வேளாண் துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பல்வேறு காரணங்களினால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். முன்னுரிமை பதிவேடு அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர் மற்றும் சீமகருவேல மரம் அகற்றுதல், நிலத்தை உழுதல்,சமப்படுத்துதல் போன்ற அனைத்து உழவியல் பணிகளுக்கும், நேரடி யாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆய்விற்கு பிறகு பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் உளுந்து, தானிய வகை அல்லது எண்ணெய் வித்து பயிர்கள் என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர்உரம், நுண்ணூட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து வழங்கப்படும்.

ஒரு ஹெக்டேர் உளுந்து,எள், தானிய வகை பயிர்களுக்கு ரூ.13,400 மானியமாக வழங்கப்படுகிறது.. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம்..” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல்.. 10 பேர் பலி.. 15 பேர் காயம்.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..

Mon Sep 5 , 2022
கனடா நாட்டின் சஸ்காட்செவன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.. அம்மாகாணாத்தின் ரெஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.. மேலும் 15 பேர் காயமடைந்தனர்.. டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் ரெஜினாவில் உள்ள ஆர்கோலா அவென்யூ […]

You May Like