fbpx

அரசு கல்லூரிகளில் M.Ed படிப்புக்கு சேர இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்….! கட்டணம் விவரம் உள்ளே…

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம்எட் (M.Ed.) சேர்வதற்கு இன்று முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023– 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். மொத்தம் ரூ.60/. (ரூபாய் அறுபது மட்டும்) செலுத்தப்பட வேண்டும். SC/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director. Directorate of Collegiate Education, Chennai 15″ என்ற பெயரில் இன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கும். விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்கள் குழந்தையும் இந்த சிக்கலில் மாட்டிக்க போறாங்க..!! பெற்றோர்களே உஷாரா இருங்க..!!

Mon Sep 25 , 2023
ஆபாச செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், ”க்ளோக்கோண்டோ எனும் செயலி ஒன்று உள்ளது. இதில் பெண்கள் மீது தவறான எண்ணம் கொண்டவர்களை தேடி பிடித்து அவர்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்களை அனுப்புகின்றனர். பின்னர், பெண்களை வைத்து அந்த நபர்களை ஏமாற்றி ஒரு நம்பரை அனுப்புகின்றனர். இதில் பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் […]

You May Like